இலங்கைப் பாடசாலைகள் கிறிக்கட் சங்கத்தினுடைய மாவட்ட பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு அணிகளிற்கிடையிலான மட்டுப்படுத்திய பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட போட்டித்தொடர் இடம்பெற்று வருகின்றது.
முன்னதாக இடம்பெற்ற போட்டியில் மத்திய கல்லூரிக்கெதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்கிய இந்து சென்.ஜோன்ஸ் கல்லூரியை வென்றது.
இன்று இடம்பெற்ற போட்டியொன்றில் யாழ் இந்துக்கல்லூரி அணி முதலாம் சுற்றினுடைய இரண்டாவது போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரியை எதிர்கொண்டது.
இடம்பெற்ற இப் போட்டியில் நாணயற்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக்கல்லூரி அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லூரி அணி சார்பாக ஜனவத்சஷர்மா 61பந்துக்களில் 69 ஓட்டங்களையும், துவாரகன் 62 ஓட்டங்களையும், பானுகோபன் 50 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பில் ஷெலுமிலன் 2 இலக்குகளையும், கிஷாந்துஜன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
254 என்னும் வெற்றி இலக்கு நோக்கித்துடுப்பாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி யாழ் இந்துக்கல்லூரி அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாது தடுமாறி 38.2 பந்துபரிமாற்றத்தின் நிறைவில் 159 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல இலக்குகளையு இழந்தது.
இதில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பிளமிங் 43 ஓட்டங்களையும், சிவதர்ஷன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லூரி அணியின்
சிவலக்ஷன் 7.2 பந்துப்பரிமாற்றங்களை வீசி 35 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளையும், வழுதி 6 பந்துப்பரிமாற்றங்களை வீசி 18 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும், பானுகோபன் 6 பந்துப்பரிமாற்றங்களை வீசி 30 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றிற்கு யாழ் இந்துக்கல்லூரி 15 வயதுப்பிரிவு அணி தெரிவாக கூடிய சாத்தியம் உள்ளது.
Kirush Shoban