இன்றைய தினம் (19/07/2012) நடைபெற்ற 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூன்றாம் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி மகாஜனா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 272 ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்தது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
கஜானந் – 83 (58 பந்துக்கள்) (8 fours, 5 sixes)
திருவேள் – 37
ஜனவத்ச சர்மா – 29 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் மகாஜனா கல்லூரி சார்பில் :
துயிலக்ஸன் – 3
டினேஸ் – 2
பிரகாஸ் – 2 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.
பின் 273 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி 26.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இதனால் யாழ் இந்து 154 ஓட்டங்களினால் இப் போட்டியில் வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் மகாஜனா கல்லூரி சார்பில் :
செந்தூரன் – 49
சரன்ராஜ் – 13 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் :
ராகுலன் – 4 விக்கெட்டுக்கள்
வழுதி – 3 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.
அடுத்து வரும் சனிக்கிழமை (21-07-2012) நடைபெறவிக்கின்ற நான்காவதும், இறுதியுமான போட்யில் கொக்குவில் இந்து அணியை சந்திக்கவிருக்கின்றது.
Kirush Shoban