இலங்கை – இந்திய ஒருநாள் போட்டித் தொடர்
நடுவர் மீள்பரிசீலனை திட்டம் இல்லை
பாகிஸ்தான் தொடரில் கற்றுக் கொண்ட பாடங்களை இந்தியாவிற்கெதிரான இத்தொடரில் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை- இந்திய அணிகள் சந்தித்த வேளையில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமா கக் காணப்படுகின்ற போதிலும், இந்தியாவிற்கெதிரான இத்தொடரில் புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகக் கிண்ணத்தை வென்றதற்கான வருத்தம் காணப்படுகின்ற போதிலும், அதிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 274 ஓட்டங்களைப் பெற்றதாகவும், பலமான இந்திய அணியின் துடுப் பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்த விரும்பியதாகவும், ஆரம்பத்தில் விக்கெட்டுக்களைப் கைப்பற்றிய போதிலும் பின்னர் வந்த வீரர்கள் சிற ப்பாக ஆடியதாகவும், குறிப்பாக டோனி மிகச் சிறப்பாக ஆடியதாகவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.
அப்போட்டியில் தாங்கள் தோல்வியடை ந்த போதிலும் அப்போட்டி மிகச் சிற ந்த கிரிக்கெட் போட்டியாக அமைந்து கொண்டதாகவும், அன்றைய நாளில் சிறந்த அணியாகக் காணப்பட்ட அணி வெற்றிபெற்றுக் கொண்டதாகவும் மஹேல தெரிவித்தார். இத்தொடரில் நடுவர் மீள் பரிசீலனைத் திட்டம் பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இலங்கைக் கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, இத்தொடரில் நடுவர் மீள்பரிசீலனைத் திட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.
அண்மையில் எடுக்கப்பட்ட சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முடிவின்படி தொடரில் பங்குபற்றும் இரு அணிகளும் அதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும், இந்தியக் கிரிக்கெட் சபை நடுவர் மீள்பரிசீலனைத் திட்டத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இத்தொடரில் அதைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.