இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும்
இலங்கை – இந்திய அணிகள் அடிக்கடி மோதுவதால் சுவாரசியம் குறைவடைவதாகத் தான் கருதவில்லை என தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவித்தார். இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான தொடருக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய அணிகளுக்கிடை யிலான போட்டிகள் அடிக்கடி இடம் பெறும் நிலையில் அதன் சுவாரசியம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படும் நிலையில், வீரர்கள் அதை உணர்கிறார்களா எனக் கேட்கப் பட்டதற்கே அவர் இவ்வாறு பதில ளித்தார்.

இலங்கை அணி ஆக்ரோஷமாகப் போட்டிகளில் பங்குபற்றக்கூடிய அணி எனத் தெரிவித்த அவர், அதன் காரணமாக இரு அணிகளுக்குமிடையி லான போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும் எனவும் மகேந்திரசிங் டோனி தெரிவித்தார். இரு அணிகளும் மிகச் சிறப்பான முறையில் போட்டியிட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் போது அதிக போட்டிகள் சுவாரசியத்தைக் கெடுக்காது எனவும் அதிக போட்டிகள் உதவிகளை வழங்குவனவாகவே அமையும். இரு அணிகளும் ஆக்ரோஷ மான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும் களத்தில் இரு அணிகளுக்கு மிடையில் எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றிருக்கவில்லை என டோனி சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் செப்டெம்பரில் 20 க்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் இத்தொ டரை அத்தொடருக்கான ஆரம்பமாக பயிற்சிகளாகப் பயன்படுத்துவீர்களா எனக் கேட்கப்பட்டமைக்கு, நிகழ்காலத்தில் வாழ விரும்புவதாகத் தெரிவித்த மகேந்திரசிங் டோனி ஒவ்வொரு தொடர் தொடராக எடுத்து போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகத் தெரிவித்தார்.

Kirush Shoban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *