பயத்தம் பருப்பு – அரை கப்,
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை
(கோஸ், கேரட், வெந்தயக் கீரை) – அரை கப்,
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்புச் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். ஆறியதும், பருப்புக் கலவையுடன் கலக்கவும். அரிசி மாவையும் சேர்த்துக் கலக்கவும்.
தயிரில் கரம் மசாலா தூளைக் கலந்து, இந்த பருப்புக் கலவையுடன் நன்றாகப் பிசைந்து, இட்லி தட்டுகளில் சிறிது எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். ஆறியவுடன் இட்லிகளை விருப்பமான வடிவங்களில் வெட்டவும். எண்ணெயில் பொரித்தெடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.