ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணியில், யுவராஜ் சிங் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ரி20 உலகக்கிண்ணத் தொடரில் ஒரு ஒவரில், 6 சிக்சர் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியவர் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங். இவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்காவில் இரண்டு மாத தீவிர சிகிச்சைக்கு பின்பு தற்போது குணமடைந்து வருகிறார்.
அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 30 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண ரி20 தொடர் வருகிற செப்டெம்பர் மாதம் 18ம் திகதி இலங்கையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Kirush Shoban