இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் அணி ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, 12 வயதாகும் அர்ஜூனுக்கு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நூறு சதங்கள் அடித்தமை உட்பட கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவர் சச்சின். தற்போது அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகிறார். கடந்த மாதம் நடந்த மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான சோதனை ஆட்டத்தின்போது இடது கை ஆட்டக்காரரான அர்ஜூன் சதம் அடித்திருந்தார். தற்போது 12 வயதாகும் அர்ஜூன், ஜிம்கானா அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் அர்ஜூனுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் அர்ஜூன் டெண்டுல்கரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கரும், அவரது தந்தையை போலவே பல சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.