இன்றைய தினம் (21/07/2012) நடைபெற்ற 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் நான்காவதும் இறுதியுமான போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி 24.5 ஓவர்கள் நிறைவில் 97 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பில் :
சுஜீவன் – 20
சஜீவன் – 19 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் யாழ் இந்து சார்பில் :
S.துவாரகன் – 6 – (8.4 overs – 24 runs)
ராகுலன் -1 விக்கெட்டுக்களைப் பெற்றனர்.
பின் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்று இப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :
M.துவாரகன் – 42*
உதயன் – 30* ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பில் :
சஜீவன் – 2 விக்கெட்டுக்களைப் பெற்றார்.
தற்போது நடைபெற்று முடிந்த முதல் சுற்றில் யாழ் இந்துக் கல்லூரி அணியானது யாழ் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி, மகாஜனா கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய 4 அணிகளையும் வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றது.
good work MR kirush