இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.

இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. ஏன் என்று குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த குறும்படம் இணையத்தள சமூக வலையமைப்புக்களை தவறாகப்பயன்படுத்துபவர்களுக்கு நல்லதோர் பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

நன்றி:-சேர்க்கைகள்

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *