தமிழ் வளரும் நல்லை மண்ணின் திருவாகி
அழகொழிரும் அற்புதம் சேர் வடிவாகி
எழில் மயிலில் ஏறி வலம் வருருவோனே
கழல் பரவும் புலவர் நெஞ்சில் உறைவோனே
பொழில் வளர் கையிலை நாதன் குமரேசா
நிழலெனவே தொடரும் அன்பர் மனவாசா
புகழ் பெருகும் உன்தன் அருள் நிலையாலே
மருள் அகன்று மண்ணில் உய்ய அருள்வாயே.
டாக்டர் ந.மணிகரன்