இது தான் தல – அஜித் நடித்து வெளிவந்துள்ள 50தாவது படம்…அது மட்டுமில்ல 50 ஆகப்போகிது என்று கூட சொல்லிருக்கு என்றலாம்.
சரி மங்காத்தாவுக்கு வருவம்.
நடிப்பு: அஜீத், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: க்ளவுட் நைன் மூவீஸ்
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கிரிக்கெட் ஊழல் சமாச்சாரத்தினை ஓர் ஹாலிவுட் சாயலில் காட்சிக்கு வந்துள்ளது இதில் அஜித் ஓர் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி,த்ரிஷாமும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள்.
இந்தியாவின் நிஜ சூதாட்டமான ஐபிஎல் கிரிக்கெட்டில், பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார் செட்டியார் ஜெயபிரகாஸ். இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி. இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், ஜெயப்பிரகாஷிடம் வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நால்வர் கோஷ்டி. இன்னொரு பக்கம், இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் உஷாராகி, அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பையில் களமிறக்குகிறது.இக்கொள்ளையடிக்கும் திட்டத்தினை தெரிந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து அப்பணத்தினை கொள்ளையடித்து தனதாக்க திட்டமிடுகிறார் அஜித்.
மறுபக்கம் அஜித்துடன் காதலில் புதைந்து போகிறார் த்ரிஷா (40 வயதான அஜித்துடன் காதல் ஏன் ஏற்பட்டது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை). இக்காதலினை மையமாய் வைத்து ஜெயப்ரகாஸ்டம் நெருக்கமாகின்றார் அஜித்.இதனால் த்ரிஷாவின் தந்தையின் ரகசியங்களை அறிந்து நால்வருடன் சேர்ந்து பணத்தி கொள்ளையடிக்கிறார்.
பணம் பகிரப்படாமல் பாதுகாப்பில் வைக்கப்படுகையில் ஜெயபிரகாஸிற்கு கொள்ளையடித்தவர்கள் யார் என்பது தெரியவரும் போது ப்ரேம்ஜி பணத்தை மகத்துடன் சேர்ந்து அஜிதை ஏமாற்றி எடுத்து செல்கிறான்.
அவர்களை தேடிச்சென்று இறுதியில் யார் பணத்தை அடைந்தார்கள் என்பது தான் மீதிக்கதை.
படத்தில் தேவைக்கதிகமாக நாயகிகளை சேர்த்த இயக்குனர் பாவம் லட்சுமிராயைத்தவிர(கிளுகிளுப்புக்கு) மற்றவர்களை பயன்படுத்த மறந்துவிட்டார். நாயகியாக வலம் வரும் த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. அதனால் ஹீரோயின்னு சொல்ல முடியாது போகிறது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது.
அக்ஷன் கிங் அர்ஜுன் தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப செயற்பட்டு தன்னை நிலைப்பித்துக்கொள்கிறார்.
படம் ஆங்கான்கே சில இடங்களில் போக்கிரி போன்ற சிலபடங்களை நினைவுபடுத்தினாலும் அஜித்தின் ஏகன் போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் பாராட்டுக்குறியதாயுள்ளது.
பாடம் பார்ப்பவர்களின் செவிகளிற்கு சென்சார் இட்ட தணிக்கைக்குழுவால் அஜித்தின் உதட்டசைவை சென்சார் செய்ய முடியாமல் போயுள்ளமை கவலைக்குரிய விடயம் தான்.ஏனெனில் ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க
வெங்கட் பிரபுவின் இயக்கம் பாராட்டத்தக்கது. வித்தியாசமான கிளைமாக்ஸிற்கு பாராட்டலாம்.ஆனால் யுவன் தான் ஏமாற்றமளித்துள்ளார்.
மொத்தத்தில் மங்காத்தா மழுங்கிய அஜித்துக்கு ஓர் மறுவாய்ப்பு எண்டு சொல்றதோட அஜித்துக்கு ஆத்தா வயசு வந்திட்டு என்று சொல்லுது…
நன்றி