உங்கள் மனிதத் தன்மை பொங்கி வழியட்டும் .தெய்வீகம் அங்கே நிகழும்.
படைத்தவரை நீங்கள் நேசித்தால் அவரே அனைவரையும் விட மிகச் சிறந்தவர்.என நீங்கள் எண்ணினால் படைப்புக்கும் மேலான நிலையில் அவரை வைத்துப் போற்றுகிறீர்கள்.ஏனெனில் அவர் தான் படைத்தவரைப் பார்ப்பது அவரோடு இருப்பது தான் மிக உயர்ந்த அனுபவமாக இருக்கும்.உங்களுக்கு நம்பிக்கை இல்லாத பட்சத்தில் தான் இருப்பு மனம் இல்லாத தன்மை போன்றவை பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்.நம்பிக்கை இல்லாத வினாடியிலிருந்து இந்த விஷயம் மிகவும் சிக்கலாகி விடுகிறது.அதற்கு பிறகு மணிக்கணக்கில் வாதங்களில் ஈடுபட வேண்டியிருக்கும்.
ஏனென்றால் அன்பு அங்கே இல்லாமல் போகிறது.நம்பிக்கை என்றாலே நிபந்தனை இல்லாத அன்பு. நீங்கள் ஒருவர் மேல் அன்பு வைத்து யார் மேல் வைத்திருக்கிறீர்களோ அவர் பதில்வினை ஆற்றாவிட்டாலும் கூட உங்கள் நேசம் அப்படியே இருக்கிறது.நீங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அத்தகைய நேசத்தை உண்ர்ந்திருக்க கூடும்.இன்னொருவர் நேசத்தை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் .வெளிப்படுத்தி இருக்க மாட்டார்.ஆனால் நீங்கள் நேசித்துக் கொண்டிருப்பீர்கள்.ஒருமுறை ஒரு மாணவன் தன் கல்லூரியின் பேராசிரியரிடம் போய் உங்கள் உதவி வேண்டும் என்றார்.பேராசிரியர் கண்டிப்பாக உதவுகிறேன் என்றார். அதற்கு அந்த மாணவன் இது கல்வி சார்ந்தது இல்லை வேறு விஷயம் என்றார்.பேராசிரியருக்கு புரியவில்லை.என்னவென்று சொல்லுங்கள் என்றார். கல்லூரியிலேயே மிக அழகான பெண்ணின் பெயரைச் சொல்லிய அந்த மாணவன் நான் அந்த பெண்ணை நேசிக்கிறேன்.எங்கள் காதல் ஐம்பது சதவீதம் வெற்றியாகி விட்டது மீதம் ஐம்பது சதவீதம் வெற்றியாக நீங்கள் தான் உதவ வேண்டும் என்றார்.ஐம்பது சதவீதம் வெற்றி என்றால் என்ன அர்த்தம்? என்று பேராசிரியர் கேட்டார்?அந்தப் பெண்ணை உயிருக்குயிராக நேசிக்கிறேன் ,ஆனால் அவள் இன்னும் எதுவும் சொல்லவில்லை அதைத்தான் ஐம்பது சத வீதம் வெற்றி என்று சொன்னேன் என்றார்.இந்த அளவுக்கு நேசம் வைத்திருப்பவர்கள் மற்றவர்கள் அதை தனக்கு வழங்க வேண்டும் என்று கூட நினைக்க மாட்டார்கள்.
கடவுள் நம்முடைய அன்புக்கு பதில்வினை ஆற்றாவிட்டாலும் பரவாயில்லை. அவர் இருக்கிறார் என்று நீங்க உறுதியாக நம்புகிறீர்கள்.நாம் பெரும்பாலும் யார் அருகில் இல்லையோ அவர்களைத்தான் பெரிதும் நேசிக்கிறோம்.பலரும் இறந்து போனவர்கள் மிகுந்த நேசம் வைத்திருக்கிறார்கள்.ஏன்னென்றால் அவர்கள் இங்கு இல்லை.அவர்கள் இங்கு இருந்த போது அவர்களின் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.அவர்களுடன் பேச்சு வார்த்தை கூட கிடையாது.ஆனால் அவர்கள் இறந்த பிறகு நேசிக்க தொடங்குவீர்கள்.இங்கு இல்லாதவர்களை நேசிப்பது உங்கள் பழக்கமாகிவிட்டதால் தான் கடவுளிடம் கூட உங்கள் நேசம் அப்படி இருக்கிறது.அவர் இங்கேயே இருந்து அவரோடு உங்கள் உணவையும் வாழ்க்கையும் பகிர்ந்து கொள்ள நேரிட்டால் கடவுளோடு உங்களுக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.உங்கள் அனுபவித்தில் அவர் இப்போது இங்கே இல்லை என்பதால் தான் அவரை நேசிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது.
அன்பு என்பது மகிழ்ச்சியானது அல்ல. அது ஒரு ஆழமான அற்புதமான வலி.மிக மோசமான காயம் ஏற்படுத்துகிற அற்புதமான் வலி.உங்களுக்குள் ஒன்று கிழிந்து சின்னபின்னமாக ஆனாலும் கூட சொல்லப் போனால் எல்லா விஷயங்களும் கிழிந்து போகிற அளவுக்கு உங்களுக்கு வலி ஏற்படுகிற போது தான் அன்பு என்றால் என்னவென்பதை உணர்வீர்கள்.மிக மகிழ்ச்சியாக இருந்தால் அது அன்பு அல்ல. அது ஒரு வசதி.ஒரளவு அன்பை அது உணரக்கூடும் ஆனால் அன்பை உணர்ந்திருப்பீர்களேயானால் அதை ஒரு வலியாக , சுகமான வலியாக உணர்ந்திருப்பீர்கள்.இப்படி எல்லாவற்றைப் பற்றியும் எல்லோரைப் பற்றியும் உணரத் தொடங்கி விடுவீர்களேயானால் உங்கள் உடல், மனம் சார்ந்த எல்லைகளை கடந்து போகிற நிலை தானாகவே நிகழும்.
அதற்கென்று நீங்கள் முயற்சி எடுக்கத்தேவை இல்லை. உங்கள் உடல் சார்ந்த எல்லைகளை கடந்து போக நீங்கள் நினைத்தால் நீங்கள் உங்களை காயப்படுத்திக் கொள்வீர்கள் ஆனால் இது அன்பின் வழியாக நிகழ்கின்ற போது இயல்பாக நிகழ்கிறது.இதன் எல்லைகளை இனிமேலும் எல்லைகளாக இருப்பதில்லை.யாராவது ஒரு முனிவரோ, ஞானியோ கடவுளை நேசிப்பது பற்றி பேசி இருக்கக் கூடும். ஆனால் உஙகளுக்கு இருக்கிற , சிந்திக்கிற அறிவு, தர்க்க அறிவு, சந்தேகிக்கிற அறிவு, கேள்வி கேட்கிற அறிவு கடவுளை பற்றி, கடவுளைப் நேசிப்பது பற்றிப் பேசாது.அது ஒரு பொருட்டாக இருக்காது.கடவுளைப் பற்றியோ படைத்தவரைப் பற்றியோ நீங்கள் யோசிக்கத் தொடங்கியதன் நோக்கமே நீங்கள் படைப்பை உணர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பாகவே “படைப்பு” என்று எதை அழைத்தீர்களோ அது இருக்கிறது.எனவே இதை யாரோ படைத்திருக்க வேண்டும்.என்று யூகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பிறகு படைத்தவ்ர்களுக்கு என்று சில பெயர்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டீர்கள்.எனவே படைத்தவரைப் பற்றி எங்களுடைய எண்ணமே படைப்பின் மூலமாகத்தான் வந்திருக்கிறது.நீங்கள் படைப்பை வெறுத்தால் உங்கள் பக்கத்தில் இருக்கிற மனிதர் வெறுத்தால் அதன் பிறகு கடவுளின் மேல் அன்பு செலுத்துவதாகச் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.இது உங்களை எங்கேயும் கொண்டு சென்று சேர்க்காது.எனென்றால் நீங்கள் படைப்பை வெறுக்கத் தொடங்கி விட்டீர்களேயானால் அதைப் படைத்தவரோடு உங்களுக்கென்ன வேலை?படைப்போடு நீங்கள் ஆழமாக நேசிப்பை உருவாக்கிக் கொண்டால்தான் இதைப் படைத்தவரோடு தொடர்பை ஏற்படுத்த முடியும்.எனவே, தெய்வீகத்தின் பெயரால் மனிதத் தன்மையை இழந்து விடாதீர்கள்.உங்கள் மனிதத் தன்மை பொங்கி வழிகிற போது தெய்வீகம் தானாக நிகழும்.உஙள் பக்கத்தில் இருப்பவரை நேசியுங்கள் என்று யேசுநாதர் சொன்னது மிகவும் முக்கியமானது.
அடுத்த வீட்டில் இருக்கும் மனிதரோடு காதல் வயப்படுமாறு அவர் சொல்லவில்லை.இப்பொழுது உங்களுக்கு பக்கத்தில் இருப்பவரை நேசியுங்கள் என்று சொன்னார்.அருகில் இருப்பவர் யாராக இருந்தாலும் எத்தகையவராக இருந்தாலும் அவரை நீங்கள் நேசிக்க வேண்டும். அவர் மனதில் எத்தனையோ தீய எண்ணங்கள் ஒடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு தெரியாது அவர் நல்லவரா?தீயவரா?அவரை நீங்கள் விரும்புகிறீர்களா?இல்லையா? இதெல்லாம் பொருட்டில்லை.அவர் எப்படி இருகிறாரோ அப்படியே நீஙகள் ஏற்றுக்கொண்டு அவருக்கு அன்பு செலுத்துங்கள். இதை நீங்கள் செய்தால் இந்த படைப்போடு நீங்கள் ஒன்றி விடுவீர்கள்.படைப்போடு கலந்து விடுவதுதான் படைத்தவரோடு கலப்பதற்கு ஒரு வழி.அதுதான் கடவுளை சென்றடைவதற்கான கதவு.இந்த படைபை நிராகரித்து விட்டால் படைத்தவரைப் பற்றி எதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இயலாது.எனவே,கடவுளை நேசிப்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்கள் சுவாசத்தில், நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியில், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலில் அன்பை கொண்டு வாருங்கள்.அது யாரைக் குறித்தோ, எதை குறித்தோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.உங்களை சுற்றியிருக்கிற எல்லவற்றோடும் இரண்டறக் கலக்கிற ஏக்கத்தோடு உஙகளை வளர்த்துக் கொள்ள முடிந்தால்,இந்த படைப்பே படைத்தவருடன் உங்களை கொண்டு சென்று சேர்க்கும்.