நேற்று நடந்ததை மறந்துவிடு இனியவன் 
நீங்கள் காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது 
எனக்கு தெரிந்திருக்கவில்லை
நான் அதற்கு காரணம் 
என்றால் என்னை மன்னித்து விடுஎன்றாள்
எப்போதும் சந்தோசமாக இரு !
என்னை நினைத்து 
வருந்தாதே !
என்ற ஆறுதல் வார்த்தை களுடன் 
ம்ம் 
என்று கொண்டே 
அவளின் அக்கறையை ரசித்தான்
அன்று முதல்
அவனுக்கென்று எதுவும் தனியாய் இல்லை.
பேசுவதிலேயே பாதி நாள் கரையும்,
குறுஞ்செய்தியில்  மீதிநாள் கரையும்.
இன்னொரு நாள் இனியன் பேசினான் மறுபடியும்.
காதலை !
இன்னும் காதலிப்பதாய்.
அவள் மௌனமானாள்
கடந்த காலத்தில் நான் இழந்தது ஏராளம் இனியன்.
சுதந்திரம்,
நிம்மதி,
பெற்றோரிடம் எனக்கிருந்த நம்பிக்கை !
இனி
அவர்கள் விழிகளில் என் விரல்கள்
கவலைச் சாயம் பூசாது.
அவர்கள் சொன்னால்
முதுமக்கள் தாழிக்குள்
முடங்கிவிடவும் எனக்கு சம்மதமே.
உங்களை எனக்கு ரொம்ம பிடிக்கும்.
ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஆனால்
அம்மா அப்பாவுக்கும் உங்களைப் பிடிக்குமென்று
நம்பிக்கையுண்டு 
அனால் அவர்களிடம் 
நான் சிபாரிசு செய்வேன் .. செய் 
என்று மட்டும்
கேட்காதீர்கள் 
நட்பை மறந்து காதல் செய்வேன் 
என்றும் எதிர் பார்க்காதீர்கள்
பதில்……
இனியவனுக்கு இன்று இது வரை
இவள் மனம் வந்ததே
போதும் என்றிருந்தது 
நண்பர்கள் வட்டாரதுடன்
பல பல கலந்துரையாடல்கள் 
அவளை நட்பிலிருந்து மாற்றி 
இது காதல் என்பதை எவ்வாறு 
புரிய வைப்பது என்று ….
நண்பன் ஒருவன்
உன் நடை உடை பாவனையை 
மாற்று அவள் 
காதல் உணர வாய்ப்புண்டு
என்ருரைக்கவே …
சாப்பிடுவதில்,
நடப்பதில்,
உட்காருவதில்,
ஏன் நகங்களில் கூட நாகரீகம் பார்க்க 
தொடங்கினான் இனியவன் ..
நேராய் நடந்தால் தான்
அவளுக்கு பிடிக்கும் 
உட்காரும் போது
முதுகெலும்பு
வளைந்துவிடக் கூடாது !
நகத்தின் நுனிகள்
விரலை மீறி
மயிரிழை கூட
முன்னேறக்கூடாது !!
அடடா
என் சொந்த முகம்
செல்லுபடியாகாத ஒன்றா ?
பிடித்தபடி வாழ்ந்த வாழ்க்கை
பிறருக்குப் பிடிக்கவில்லை
பிடிக்கவேண்டுமென்பதற்காகவே
சிலநாள் எனக்குப்
பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது !
ஆம்
புதிதாய் ஒரு விடயம்
அவள் பெற்றோரிடம் 
தன்னை இனியவன் காதலிப்பதாக 
கூற அவர்களும்
உன் இஷ்டம் 
என்று கூறியதை 
நண்பர்கள் மூலம்
அறிந்திருந்தான் அவன் 
இன்னும் ஒன்று அவனுக்கு தெரியவில்லை….
                                                                                                    பார்த்தியின் பதிவு தொடரும்…..

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *