இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே,
இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.
 ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால்……,

*சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

*இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

* அடர்ந்த `பிங்க்’ நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்’ நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.

* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!


                                                                                                          நன்றி-இணையம்

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *