தமிழ்நாடு, கடலூரில் மிகவும் அரிதான மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளை நாகம் சிக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சிவசக்தி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டு மாடிப் படியின் கீழே இந்த வெள்ளை நாகம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வெள்ளை நாகம் படமெடுத்து ஆடியதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் பிராணிகள் நல ஆர்வலர் பூனம் சந்துக்கு தகவல் கொடுத்தார்.
அவர் இந்த அரிய வகை வெள்ளை நாகத்தை லாவகமாக பிடித்தார். பின்னர் அதை அரசு காப்பு காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றார்.
அப்போது பூனம் சந்த் கூறுகையில், இந்த நாகம் அரிய வகையை சேர்ந்தது. இதன் உடலில் கருப்பு செல்கள் குறைபாட்டால் வெள்ளையாக காணப்படுகிறது.
இந்த வெள்ளை நாகத்தால் அதிக சூட்டையோ, சூரிய ஒளியையோ தாங்க முடியாது. இருட்டிலும், குளிரான இடங்களிலும் மட்டுமே பதுங்கி இருக்கும்.
அதிக விஷம் உள்ள இந்த நாகம் பிற உயிரினங்களை உடனடியாக கொல்லக் கூடியது என்றார்.