உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன.ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது.
பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது.இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது.காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமியின் புகைப்படங்களைப் எடுக்கிறது.தற்போது இணையத்தில் வெளியாகிய இக்காணொளி பெரும் வரவேற்பினைப்பெற்றுள்ளது.
அதனை நீங்களும் கண்டு இரசியுங்களேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *