பிரிவைக் கொடுத்தவர்கள்
சந்தோசத்தில் திளைக்க
பிரிவைச் சந்தித்தவர்கள்
துன்பத்தில் திளைக்க…
கடந்த நினைவுகள் மனதினில்
வந்து கண்களில் கண்ணீர்த்
துளிகளால் எட்டிப்
பார்த்து சிரிக்கும்..
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
வருசங்கள் யுகங்களாகிக்
போக உண்ணும் உணவு-கூட
அமிர்தமாயினும் அமிலமமாக,
நாட்கள் நத்தை வேகத்தில்
நகர்ந்து கொண்டே செல்கிறது..
ஆக்கம்: யாயினி