மயான காண்டம்
எனக்காய்
புதிதாய் …
நிசப்தமான
கருவறையில்
தெய்வமாய்…!!!
பாவப் பெட்டலங்களால்
அபிசேகிக்கப்பட்டிருந்தேன்
வானர
மத நெறியில்
எனக்குமோர்
விரத நீதி
கொப்பூழ் நாண்
செலுத்துகையில்
என்னுள்
வித்தாகிப் போன
பித்துணர்வுகள்
கேவல வினாக்களின்
கேள்விக் குறியானேன்..??
கவரிகளின்
ரோமம் களையப்படுகிறது
நிர்வாணத்தின்
உச்ச நிலை
உணர்ந்தேன் ..!!
இருளிகளின்
இரவல்க்
கணவனானேன்
வெட்கச் சிறைகள்
வழிவிட்டன ..
இரு நிழல்கள்
தொடர்ந்தன
தன்னைக் கெட்டவன்
என்றது
அதிலொன்று
நான் என்ற
ஒருவன்
நரகப்பிரவேசத்திற்கு
தயாராகின்றான்..!! ——–ஆதி பார்திபன்