Category: சினிமா

கோச்சடையானை வாங்கியது ஜெயா டி.வி.! இந்தாண்டு இறுதியில் ரிலீஸ்!!

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டி.வி., உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெயா டி.வி. ரஜினி நடிப்பில், அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகிவரும் படம் கோச்சடையான். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை…

ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் ஜிவாவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்

சென்னை, : தமிழில் ‘ஆயுத எழுத்து’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘7ஆம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘ப்ளாக்’, ‘மை நேம் இஸ் கான்’, ‘கஜினி’, ‘அஞ்சானா அஞ்சானி’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி.கே.சந்திரன். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாகும் வரிசையில் இவரும் இப்போது…

குழந்தைகளின் எதிர்காலம் தான் நயன்தாராவுடனான என் பிரிவுக்கு காரணம்:பிரபுதேவா

காதலன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பிரபுதேவா, நடன இயக்குனர், இயக்குனர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் ஆவார். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் காதல் ஏற்படவே, தனது முதல் மனைவியான ரமலத்தை பல லட்சம் ரூபாய் செலவு செய்து விவாகரத்து…

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார்- கார்த்தி

நடிகர் கார்த்தி நடித்த சகுனி திரைப்படம் மதுரை தங்கரீகல் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை நடிகர் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் தயாள் ஆகியோர் வந்தனர். பின்னர் ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். கேள்வி:- நடிகை அனுஷ்கா உங்கள் அண்ணன் சூர்யாவுடன்…

‘பாசமலர்’ மிகவிரைவில் வெளியாக இருக்கிறது!

சென்னை, : சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி இணைந்து நடித்த படம், ‘பாசமலர்’. 1961ல் வெளியான இந்த படம் இன்றும் அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. கண்ணதாசனின் பாடல்களும், ஆருர் தாஸின் வசனங்களும் என்றைக்கும் மறக்க முடியாதவை. ஏ.பீம்சிங்…

பாண்டிராஜ் இயக்கும் ‘கேடி பில்லா ‘

‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’ படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மதன், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின் முடிவாகவில்லை. முக்கிய வேடங்களில் தம்பி…

ஐஸ்வர்யாவின் அடுத்த படத்திலும் தனுஸ்

தனுஷ்-ஸ்ருதிஹாசனை வைத்து ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார். இது குழந்தைகளுக்கான படமாம். இதற்காக ஏராளமான குழந்தைகளுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வருகிறாராம். இந்தப் படத்தை தயாரிக்கப்போவதும் ஐஸ்வர்யாதான் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி திருநங்கை வேடமாம்.

அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆதி பகவன்’. இதில் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவற்றில் ஒன்று திருநங்கை வேடமாம். ஆதி பகவனில் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் படக்குழுவினர். இதில்…

முகபுத்தகத்தில் தமிழரை விமர்சித்த நடிகை!

பெங்களூரு : தமிழகத்தையும், தமிழர்களையும் அவதூறாக, தனது பேஸ்புக்கில் எழுதிய நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு ஓட்டம் பிடித்தார். “ஏழாம் அறிவு’, “காதலில் சொதப்புவது எப்படி’ உட்பட சில படங்களில், சின்ன, சின்ன வேடங்களில்…