Category: செய்திகள்

திருமணம் செய்வதாக ஏமாற்றிய யாழ் பெண்! நீதிமன்றம் அழைப்பாணை

இத்தகைய பெண்களால் யாழ்ப்பாணம் எனும் பாரம்பரிய நம் பூமிக்கு கலங்கம் ஏற்பட்டுவருகின்றது இதை தடுக்கவும் யாழ் பெண்களின் கலங்கம் துடைக்கவும் பெண்கள் அமைப்புக்கள் முன்வரவேண்டும் அத்தகைய செயற்பாட்டிற்கு நமது “பாருங்கோ” வலைத்தளம் களம் அமைத்துதரும்.இத்தகைய செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நடக்கமாலிருக்க வேண்டும்…

யாழில் கட்டிடங்கள் அமைப்பதற்கான சட்டவிதிகள் தொடர்பான் கருத்தரங்கு

கட்டிடயாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் கட்டிடங்கள் அமைப்பதற்கான சட்டவிதிகள் தொடர்பான விளக்கும் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை…

ஆரம்பகல்விச் செயற்பாடுகள் -2012

செயலமர்வு. மேற்படி செயலமர்வு06-07-2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 2.30 மணிவரை யா-கோப்பாய் நாவலர் வித்தியாலயத்திலும்.யா- இந்துக்கல்லூரியிலும் நடைபெறும்.

மெக்சிகோ அதிபர் தேர்தலில் என்ரிக் பெனா நீட்டோ வெற்றி

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோ அதிபர் தேர்தலில் என்ரிக் பெனா நீட்டோ வெற்றி பெற்றுள்ளார்.மெக்சிகோ அதிபர் பெலிபி கால்ட்ரனின் பதவி காலம் முடிவடைந்ததால், நேற்றுமுன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. பி.ஆர்.ஐ., கட்சி சார்பில் மெக்சிகோ மாகாண முன்னாள் கவர்னர் என்ரிக் பெனா நீட்டோ, 45,…

நயீனாதீவு பிரதேசத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வழங்க நடவடிக்கை: தவிசாளர்

நயீனாதீவு பிரதேசத்திற்கு விரைவில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவாராசா தெரிவித்தார். இதற்காக கொழும்பில் இருந்து மின் பிறப்பாக்கி நயீனாதீவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “அத்துடன் இதுவரை காலமும்…

நாவலப்பிட்டி ஜயத்திலக்க விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

நவீனமயப்படுத்தப்பட்ட நாவலப்பிட்டி ஜயத்திலக்க விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் திறந்து வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் காதர்…

கொடிய புலியுடன் கயிறிழுத்தல் போட்டிக்கு நீங்கள் தயாரா? (படம், நேரடி வீடியோ)

விளையாட்டு போட்டிகளில் எதிர் எதிர் அணிகள் கயிறிழுத்தல் போட்டியில் ஈடுபடுவது எல்லோருக்கும் தெரியும். இங்கு நீங்கள் கேள்விப்படப்போவது ஓர் விநோதமான கயிறிழுத்தல் போட்டி. கொடிய புலியினமான சைபீர புலியுடன் கயிறிழுத்தல் போட்டி நடைபெறுகிறது. இதில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். அமெரிக்காவின் புளோரிட…

சிலந்தி வலையிலிருந்து வயலின் தந்தி: யப்பான் பேராசிரியர் சாதனை

யப்பானின் நாறா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஷிகிஜோஷி ஒசாகி என்ற பேராசிரியர், சிலந்தி வலையில் இருந்து வயலினில் பயன்படுத்தப்படும் கம்பிகளை உருவாக்கியுள்ளார். குறித்த பேராசிரியர் 35 வருடமாக சிலந்தி வலை பற்றிய ஆராட்சியில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலீஸ் காரில் பெற்றோல் திருடி அதை பந்தாவாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர் கம்பி எண்ணுகிறார்!

பொலீஸ் அவசர அழைப்பு இலக்கம் 911 இல் சேவையில் ஈடுபடும் காரில் இருந்து பெற்றோல் திருடி, அதை படம்பிடித்து பந்தாவாக facebook இல் வெளியிட்ட அமெரிக்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கென்டூகி மாகாணத்தை சேர்ந்த 20 வயதாகும் மைகேல் பேகர் என்ற இளைஞனே…

விமான கடத்தலில் அமெரிக்க மாணவர்கள்!

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறையின் ஆளில்லா விமானத்தை டெக்சாஸ் பல்கலைகழக மாணவர்கள் கடத்தினர். அந்த விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இயக்கிக் கொண்டிருந்த போதே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விமானத்தை மாணவர்கள் பறித்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். டெக்சாஸ்…