பல கணிப்பொறிகளை ஒன்றாகப் பிணைக்க வேண்டுமெனில் கூடுதலாகச் சில வன்பொருள் சாதனங்கள் தேவைப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பிணையத்தின் வகை, பரப்பு இவற்றைப் பொறுத்து அதில் பயன்படுத்தப்படும் வன்பொருள்களும் வேறுபடும். இத்தகைய வன்பொருள் சாதனங்களைப் புரிதல் கருதி மூன்றாக வகைப்படுத்தலாம்.

(1) குறுகிய பரப்பில் செயல்படும் பிணையங்களில் கணிப்பொறிகளைப் பிணைக்கத் தேவையானவை.

(2) அத்தகைய பிணையங்களைக் கூடுதல் பரப்புக்கு விரிவுபடுத்தத் தேவையானவை.

(3) பல சிறிய பிணையங்களை இணைத்துப் பெரிய பரந்த பிணையத்தை நிறுவத் தேவையானவை.

எத்துணை சிறிய, பெரிய பிணையமாய் இருப்பினும் அதில் கணிப்பொறிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கணிப்பொறிகளை ஒன்றையொன்று பிணைக்கப் பயன்படும் வன்பொருள்களுள் மிகவும் முக்கியமானவை:

(1) வடங்கள் (Cables)
(2) செருகுதுளைகள், இணைப்பிகள் (Jacks & Connectors)
(3) குவியம் (Hub)
(4) பிணைய இடைமுக அட்டை (Network Interface Card

By thanaa

2 thoughts on “Network”
  1. You feel confused about your site’s rating? You should not feel that, just because complete link building service and optimization stuff can rescue your internet business fast. No crisis will act upon your web business!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *