ஆர்ப்பரிக்கும் இதயம்
அலை கடல் போல்
கூர்ப்படையா என் காதல்
இடம் தேடி அலைகிறது
மனதிற்கு மனம் தாவி
காதலுணர்வு வெறும்
காகிதத்தில்
கவிதைக் கொப்பிகளில்
இடப் பற்றாக் குறை
நிலாச்சாரல் தொடர் நிழல்க்காதல்
நிலை மாறும் உலகும்
நிலையில்லா இளமையும்
தலை காட்டிச் செல்லும்
பருவப் பெண்கள் கூட்டம்
காதல் சத்தியாக்கிரகத்தில் நான்
ஓமோன் சுரப்புக்கள்
ஒய்யாரமாய் நடக்கிறது
ஒப்பில்லாக் காதல் வலி
உயிர் தேடி அலைகிறது -காதல்
இடம் கேட்டுத் திண்டாடும் இதயம்
இடம் கேட்டுத் திண்டாடும் இதயம்
—இதயத்தில் இடம் போதவில்லையா ஆதி. வாழ்த்தக்கள்.
Nice….