தற்போது கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகிள் ப்ளஸ் இப்போது பலரையும் கவர்ந்து ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை குறுகிய காலப்பகுதியில் தன் வசம் இழுத்துள்ள இது பேஸ்புக்கினது தன்னாதிக்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
அப்படி என்ன இருக்கிறது கூகிள் ப்ள்ஸில்…..?
ஆம் பேஸ்புக்கினை பலவாறாக உடைத்து பேஸ்புக்கினை விட இலகுவாக கையாளக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதே இதற்குக்காரணமாக உள்ளது.
+Circles,+Hangouts, +sparks, +Mobile, +Huddle எனும் பல புதிய விடயங்களை உள்ளடக்கியதாக பேஸ்புக்கிலிருந்து முற்றிலும் இலகுவாக்கப்பட்டதாக இது காணப்படுகிறது.
circle
வட்டம் என குறிப்பிடப்படும் இது எமது குறிப்பிட்ட ஸ்டேடஸினை பகிர்ந்துகொள்ள விசேட தன்மையை கொண்டு காணப்படுகிறது. அதாவது பேஸ்புக் போல இல்லது நண்பர்களாக உள்ளவர்களை நாம் பிரித்தெடுத்து மேலும் வகைப்படுத்தி கையாள இது உதவுகின்றது. இது கூகிள் பிளஸ் அனைவரையும் கவர ஓர் முக்கியமான காரணமாக உள்ளது.
Hangouts
எப்போதும் தொடர்பில் இருப்போம் எனும் வகை தமிழாக்கத்தினை நாம் இதற்கு அளிக்க முடியும் இது வீடியோ அரட்டை செய்வதற்கென உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அத்தோடு இது குறித்த குழு இடையேயான conference அரட்டை செய்யக்கூடிய வகையில் உள்ளது பேஸ்புக்கில் அவதானிக்க முடியாத ஒன்றாகும். இதனாலேயே தற்போது பேஸ்புக் ஸ்கைப் உடன் இணைந்து இவ்வசதியை வழங்கி வருகிறது.
sparks
இது எமது விருப்பங்களை சேமித்து வைக்கும் இடமாக உள்ளது இதுவும் பேஸ்புக்கில் நாம் காண முடியாத ஒன்றாகும்
இதன் மூலம் உங்கள் விருப்பத்துடன் தொடர்புடையவற்றை நீங்கள் இணையம் மூலம் இலகுவாக அறிய முடியும்
Huddle
இது கூகிள் ப்ளஸின் மோபைல் வழி அப்பிளிகேஸனாக உள்ளது.இதன் மூலம் இணையற்ற instant messaging வசதியினை அனுபவிக்க முடியும்.
நிங்கள் கூகிள் ப்ளஸில் இணைந்து விட்டீர்களா? இல்லையெனில் கீழே உங்கள் கருத்துக்களை பதிப்பதன் மூலம் அழைப்பிதழை பெற்றுக்கொள்ளுங்கள்
supper
hai friends
wait 4 google+.this is world most like peoples net work.
nice. plz sent invitation
thanks
pls sent
pls add me in google plus