இலங்கை துடுப்பாட்ட சங்கதினல் நடத்தப்பட்ட 17வயதுப் பிரிவிற்குரிய போட்டியில்இன்றைய தினம் (16/07/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி யாழ் இந்துவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன் அடிப்படையில் களமிறங்கிய யாழ் இந்துவின் துடுப்பாட்டம் ஆரம்பம் முதலே அதிரடியாக இருந்தது. பின் இறுதியில் யாழ் இந்து 40 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 390 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பெடுத்தாட்டத்தை நிறுத்திக் கொண்டது.
இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :
சஜீகன் – 136 (88 பந்துக்கள்)
மதுசன் – 52 (19 பந்துக்கள்)
சிவஜனன் – 46
றுக்ஸ்மன்- 43 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி சார்பில் :
ஜெனித்தன் – 4 விக்கெட்டுகள்
கபிலன் – 3 விக்கெட்டுக்கள்
பின் 390 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி சார்பில் :
ஜெனுசன் – 31
ஜெனித்தன் -23 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் யாழ் இந்து சார்பில் :
மதுசன் – 3 விக்கெட்டுகள்
குகானந் – 2 விக்கெட்டுகள்
இப் போட்டியில் யாழ் இந்து 294 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இப் போட்டியில் சதமடித்ததன் மூலம் இத் தொடரில் இரண்டு சதங்களை பெற்ற பெருமை சஜீகனையே சாரும். இவர் இச் சுற்றில் 2 சதங்கள்,1 அரை சதம் உள்ளடங்களாக மொத்தம் 388 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kirush Shoban
thanks shopan our school its best
ya jhc is rock
ya guys Rockets but 2011 bad we are miss big match